Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டதை செய்யுங்க… மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள்… பேச்சுவார்த்தையில் காவல்துறையினர்…!!

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர் கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். நிலையில் கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகள் திடீரென பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் வலியுறுத்தி கோரிக்கைகளாவது “அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தரவேண்டும், கல்லூரியில் தரப்படும் உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும்,  மடிக்கணினி வழங்காத மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும், மேலும் பழிவாங்கும் நோக்கத்தோடு ஒரு மாணவனை மட்டும் பருவத் தேர்வு எழுதவிடாமல் இருக்கும் கல்லூரி முதல்வரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் போன்றவற்றை முன்னிறுத்தி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழப்பழுவூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் அவர்களது கோரிக்கைகளை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக காவல்துறையினர் கூறியதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |