பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவர் பெண் வேடமிட்டபடி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரியில் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த எபின் ராபர்ட் என்ற மாணவர் எந்திரவியல் 3 ‘ஆம் ஆண்டு படித்து வந்தார்.கல்லூரி விடுதியில் தங்கி இருந்த எபினுக்கு நீண்ட நாட்களாகவே பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் தெரிவித்தனர்.
விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் பெண்கள் அணியும் ஆடை, அணிகலன்களை எபின் அணிந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.மேலும் பெண் வேடமிட்டு செல்போனில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் எபின் பதிவு செய்து வைத்திருந்ததாக உடன் தங்கி இருந்த சக மாணவர்கள் கூறியுள்ளனர். நாளை மறுநாள் கல்லூரி தேர்வுகள் தொடங்கிய நிலையில், எபின் ராபர்ட் தனது அறையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அதை வீடியோவாகவும் எபின் ராபர்ட் பதிவு செய்துள்ளார்.
உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த பெரியநாயக்கன் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லுரி மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எபின் ராபர்ட் தற்கொலை செய்த வீடியோவையும் கைப்பற்றிய போலீசார், இதற்கான காரணம் என்ன என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.