Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா இருங்க…. ஜூன் மாதம் பொதுத்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

வரும் ஜூன் மாதம் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தபட்டு வருகின்றது. இதையடுத்து பெற்றோர்களின் சம்மதத்துடன் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் 10, 11 மற்றும் 12 ஆம்வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதற்கான கால அட்டவணை குறித்து பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்த முதற்கட்ட ஆலோசனையில், ஜூனில் பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மே கடைசி வாரத்தில் தொடங்கி ஜூன் வரை பொது தேர்வை நடத்தலாம் என கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அட்டவணை  ஒப்புதலுக்கு பின்னர் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Categories

Tech |