Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் உடைமைகளை எடுத்த பின்னர் விடுதிகளை கையகப்படுத்தலாம் – அண்ணா பல்கலை.,!

மாணவர்கள் உடைமைகளை எடுத்த பின்னர் விடுதிகளை கையகப்படுத்தலாம் என அண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார்.

சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 39,641 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 559 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைகழக விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அண்ணா பல்கலை. சம்மதம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலை.,கடிதம் எழுதியுள்ளது. மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கான வசதிகளை செய்யுமாறு மாநகராட்சிக்கு, பல்கலை., துணைவேந்தர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் விடுதிகளை கையப்படுத்துவதற்கு முன்னர் வெளியூர் மாணவர்கள் சென்னை வரை ஏற்பாடு செய்ய வேண்டும், மாணவர்களின் உடைமைகளை ஒப்படைந்த பின்னர் விடுதிகளை பயன்படுத்தி கொள்ளலாம் என துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளார். சென்னைக்கு வரும் மாணவர்கள் மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்ப மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும். முதலில் வேறு கட்டிட்டங்களை பயன்படுத்திய பின்னர் அதி அவசர தேவைகளுக்கு விடுதிகளை பயன்படுத்தி கொள்ளலாம் என அண்ணாஎ பல்கலை., துணைவேந்தர் சூரப்பா பதில் அளித்துள்ளார்.

Categories

Tech |