Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சி தொடர்பு கொண்டால் மட்டுமே மாணவர்கள் விடுதிகளை காலி செய்யணும்… அண்ணா பல்கலை.!!

சென்னை மாநகராட்சியில் இருந்து தொடர்பு கொண்டால் மட்டுமே மாணவர்கள் விடுதி அறைகளை காலி செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக பல்கலை.க்கு வந்து மீண்டும் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை மாநகராட்சியே மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

மாநகராட்சியின் ஏற்பாடுகளில் திருப்தி இல்லை என்றால் விடுதிகளுக்கு வந்து செல்ல ஒப்புக்கொள்ள வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நேற்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுதிகளை வழங்க தயார் என்று வெளியிட்ட அறிவிப்பால் மாணவர்கள் குழப்பமடைந்த நிலையில் இன்று அண்ணா பல்கலை விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தும் மையங்கள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மையங்களாக செயல்பட்டு வருகின்றன. அதன்படி அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களின் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றும் வகையில் வரும் சனிக்கிழமைக்குள் விடுதியை ஒப்படைக்குமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், அந்த விடுதிகளில் ஆராய்ச்சி மாணவா்களின் உடமைகள், ஆய்வு தொடா்பான பொருள்கள், ஆராய்ச்சி தொடா்பான கட்டுரைகள் இருப்பதால் அதை ஒப்படைக்க முடியாது. மேலும் சில மாணவர்கள் விடுதியில் தங்கியிருப்பதால் சனிக்கிழமைக்குள் விடுதியை வழங்குவது கடினம் என தெரிவித்திருந்தது.

இருப்பினும், அண்ணா பல்கலைக்கழகம் விடுதிக்கு பதிலாக கலையரங்கத்தை தர முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், விடுதிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழகம் நேற்று சம்மதம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக, தற்போது மாணவர்களுக்கு விளக்க அறிக்கையை அண்ணா பல்கலை. அனுப்பியுள்ளது

Categories

Tech |