Categories
கல்வி மாநில செய்திகள்

‘மாணவர்கள், பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை’… ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர்..!!

மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கூறியுள்ளார்.

பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவது கட்டாயம் இல்லை என்றும், வருகை பதிவேடு என்பது பள்ளிகளில் கடைபிடிக்க படாது என்று திருச்சி மண்டல தலைவரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருமான நிர்மலா ராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உடல்நிலையில் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதையொட்டி சில முன்னேற்பாடுகள் குறித்து திருச்சி மண்டல தலைவர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருமான நிர்மலா ராஜ் தெரிவித்துள்ளார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 3 பள்ளிகளுக்கு ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருவார்கள். மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை என்றும், வருகைப் பதிவேடு என்பது பள்ளிகளுக்கு கடைபிடிப்பது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தோடு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று அவர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை அலுவலர் அறிவழகன் ஆகியோர் அருகில் இருந்தனர்.

Categories

Tech |