Categories
தேசிய செய்திகள்

‘தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சீனாவிலிருந்து வந்த மாணவர்கள்’..!!

சீனாவில் மருத்துவ படிப்பு பயின்ற மாணவர்கள் இருவர் புதுச்சேரி வந்துள்ள நிலையில், அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்றாலும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் தகவல் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காய்ச்சல் நோய் சீனாவில் பரவிவருகிறது. தற்போது இந்த வைரஸ் காய்ச்சல் நேபாளத்தில் பரவியதையொட்டி. இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் மோகன் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி மாகே, காரைக்காலை சேர்ந்த 2 மாணவர்கள் சீன நாட்டில் மருத்துவ படிப்பு மேற்கொண்டு வந்தனர். அவர்களும், சீனாவில் ஒரு வியாபார நிறுவனத்தில் பணிபுரிந்தவரும் புதுச்சேரி திரும்பியுள்ளனர். அவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்தும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறி இல்லை. எனினும் அவர்கள் மூவரும் 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும் அவர், இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டால் தொடர்ந்து 28 நாட்கள் பரிசோதனை செய்து வரவேண்டும். சளி, காய்ச்சல் அறிகுறியுடன் யார் வந்தாலும், நோய் பரவாமலிருக்க மருத்துவர்கள் அனைவருக்கும் முகமூடி உடன் ஆடைகள் தயார் செய்துள்ளோம். பொது மக்கள் அனைவரும் கைகளை அவ்வப்போது கழுவ வேண்டும், யாரும் பயப்பட வேண்டாம். சுகாதாரத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

Categories

Tech |