Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அரியரை வென்ற அரசனே…!” முதல்வருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்…. மாணவர்களின் கவனிக்கத்தக்க செயல்…!!

முதல்வருக்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல்லில் மாணவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது .

கொரோனா தாக்கத்தை தடுக்கும் விதமாக மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வியும் கேள்விக் குறியானது. 10, 11 மற்றும் 12ஆம்  வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடைபெறாத நிலையில் தமிழக அரசு பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.

அதேபோன்று கல்லூரி மாணவர்களும் தேர்வை சந்திக்க முடியாத சூழலில் இருந்ததால் இறுதி செமஸ்டர் தேர்வை தவிர மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரியர் தேர்வு எழுதுவதற்கு பணம் செலுத்தி காத்திருக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார். பல மாணவர்கள் எண்ணிலடங்கா அரியர்களை வைத்துக்கொண்டு டிகிரி முடித்து விடுவோமா நமது பெயருக்கு பின்னால் பட்டத்தைப் போடுவோமா  அச்சத்தில் இருந்து வந்தனர்.

அவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும் விதமாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டதால் மிகுந்த மகிழ்ச்சியில் மாணவர்கள் ஆழ்ந்தனர். அவர்களது சந்தோசத்தை வெளிப்படுத்தும் விதமாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திண்டுக்கல்லில் போஸ்டர் ஒன்று தயார் செய்துள்ளனர். அதில் அரியரை வென்ற அரசனே, மாணவர்களின் பாகுபலியே என பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல் முழுவதும் ஒட்டியுள்ளனர். மாணவர்கள் தயார் செய்த அந்த போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Categories

Tech |