Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் சீக்கிரமா குடுங்க…. படிக்க கஷ்டமா இருக்கு… போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…!!

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பள்ளி மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள நெடுவயல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அங்கு அமர கூடாது என்று கூறி அப்புறப்படுத்தியுள்ளனர்.

அதன் பின் அந்த மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுவினை அளித்தனர். அந்த மனுவில் கடந்த 2017 -18 ஆம் ஆண்டு படித்த தங்களுக்கு தமிழக அரசு வழங்கும் மடிக்கணினி இன்னும் வழங்கப்படாத காரணத்தால் படிக்க சிரமமாக உள்ளதாகவும், அதனை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மேலும் இது தங்களின் உயர்கல்வி படிப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

 

Categories

Tech |