மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படும் தேதி குறித்து மாநில அரசு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனவைரஸ் படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில் பள்ளி கல்லூரி திறப்பதில் ஒருவித பயம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. முக்கியமாக பெற்றோர்கள் பள்ளிக்கு திறப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முதலில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரட்டும், அதன் பின்னர் பள்ளிகள் திறக்கப்படடும் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் பொது தேர்வு எழுதும் பத்து மற்றும் பன்னிரண்டு வகுப்பு மாணவர்களின் கல்வி விஷயத்தில் அலட்சியம் காட்டக் கூடாது என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை டிசம்பர் 18ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க மத்திய பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்கள் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரவேண்டும்.
நாளொன்றுக்கு 50 சதவீத மாணவர்களே அனுமதிக்க வேண்டும். பள்ளி பேருந்துகளில் 50 சதவீத மாணவர்கள் மட்டும் பயணிக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 4ஆம் தேதியில் இருந்து ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்பினருக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேசமயம் ஐந்து வயதிற்கு கீழ் பயிலும் மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வேண்டாம் என்று இத்திட்டத்தில் இருப்பதாக தெரிகின்றது. இந்த சூழலில் பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் பெற்றோர்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.