நடப்பாண்டிற்கான செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 14ஆம் தேதி முதல் தேர்வு தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்த பின்பு மற்ற மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. தேர்வு தொடர்பான அட்டவணை இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என்று கூறியிருந்தது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்விக் பயின்று வருகின்றனர். இது தவிர பல்கலைக்கழகங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழிநுட்பக் கல்லூரிகளின் தேர்வுகளை ரத்து செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அரியர் எழுதுவதற்கு கட்டணம் செலுத்தி மாணவர்கள் மட்டும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து இருந்தார். இதற்கு இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவு அளித்தது. இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் தள்ளி வைத்துள்ளது.