Categories
கோயம்புத்தூர் தேசிய செய்திகள் மதுரை

“மாணவர்கள் போராட்டம்” மதுரை கோவையில் மறியல்…… 50க்கும் மேற்பட்டோர் கைது….!!

டெல்லியில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய காவல்துறையை கண்டித்து  மதுரை மற்றும் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராகவும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வலுவாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்திலும் இதற்கான போராட்டங்கள் தற்பொழுது வலுபெற்றுள்ளன. அதன் ஒரு பகுதியாக மதுரை மற்றும் கோவையில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் மேற்கண்ட இரண்டு விஷயங்களை கண்டித்து  போராட்டம் நடத்தினர். இவர்களில் 50க்கும் மேற்பட்டோரை தற்போது காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Categories

Tech |