கல்லூரிக்கு செல்லும் 2 பாதைகளிலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரியில் உள்ள தென்னம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரி அமைந்திருகிறது. இந்தக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் எல்லூகான் கொட்டாய் கிராமம் சாலை வழியாகவும் மற்றும் சர்க்கரை குடியிருப்பு வழியாகவும் மாணவர்கள் கல்லூரிக்கு செல்கின்றனர். பின்னர் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதினால் எல்லூகான் கொட்டாய் வழியாக கல்லூரிக்கு செல்ல முடியாத நிலையில் சேறும் சகதியுமாக இருக்கிறது.
இதனையடுத்து மற்றொரு வழியில் மாணவர்கள் கல்லூரிக்கு செல்வதற்கு முயன்ற போது ஆலை நிர்வாகம் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் 2 சாலைகளிலும் செல்ல முடியாததால் கோபமடைந்து சர்க்கரை ஆலை நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு பிறகு மாணவர்கள் அங்கிருந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.