உக்ரைன் நாட்டில் வெடிகுண்டு வீசப்பட்டு சேதமடைந்த கட்டிடத்தில் நின்றுகொண்டு மாணவர்களும் மாணவிகளும் எடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டில் ரஷ்யா 110 நாட்களை கடந்து தீவிரமாக போர்தொடுத்து கொண்டிருக்கிறது. இதனால் உக்ரைன் மக்கள் தங்கள் குடியிருப்புகளையும், குடும்பத்தினரையும் இழந்து தவித்து வருக்கிறார்கள். இந்நிலையில், வெடி குண்டு வீசப்பட்டதில் சேதமடைந்த கட்டிடத்தில் நின்றுகொண்டு மாணவர்களும் மாணவிகளும் சேர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.
அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. போரில் நிலைகுலைந்து போன கட்டிடங்களில் நின்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சில மாணவ-மாணவிகள் சேர்ந்த குழு தீர்மானித்துள்ளது. எனவே, இடிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளுக்குள் நின்று கொண்டு 13 மாணவ மாணவிகள் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.
இந்த புகைப்படத்தை எடுத்த நபர் தெரிவித்ததாவது, இந்த போர் கடும் அதிர்ச்சிகரமான அனுபவத்தை தந்தது. இந்த மாணவர்கள் போரில் சேதமடைந்த இடங்களில் நின்று எடுத்த புகைப்படங்களை வருங்காலத்தில் தங்கள் குழந்தைகளிடம் காண்பிப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.