Categories
உலக செய்திகள்

“மாணவிகளுக்கு ஆசிரியை வழங்கிய அறிவுரை!”.. கொந்தளித்த பெற்றோர்.. மன்னிப்பு கேட்ட பள்ளி நிர்வாகம்..!!

இங்கிலாந்தில் ஒரு பள்ளியின் ஆசிரியை, மாணவிகளிடம் கூறிய அறிவுரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்தில் உள்ள Northumberland, Rothbury என்ற பகுதியில் Dr Thomlinson Church of England Middle School என்ற பள்ளி அமைந்துள்ளது. இங்கு 8 லிருந்து 13 வயது வரை உள்ள குழந்தைகள் பயில்கிறார்கள். இந்நிலையில் இப்பள்ளியில் உள்ள ஆசிரியை ஒருவர் சிறுமிகளிடம் உடற்கல்வி வகுப்பிற்காக ஷார்ட்ஸ் உடைக்கு பதிலாக பாவாடை அணிந்து வாருங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் சார்ட்ஸ் அணியும் போது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் அபாயம் உண்டாகும் என்று கூறியிருக்கிறார். மேலும் பிறரிடமிருந்து உங்களை காக்க பாவாடை அணிவது சிறந்தது என்று தெரிவித்துள்ளார். இதனை சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் கொந்தளித்த பெற்றோர்கள், உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. எனவே பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் இது அந்த ஆசிரியையின் தனிப்பட்ட கருத்து தான். பள்ளி நிர்வாகத்தின் கருத்து இல்லை என்று விளக்கமளித்துள்ளது. இதனையடுத்து அந்த ஆசிரியையும்  சிறுமிகளின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

Categories

Tech |