Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வயலில் இறங்கி நாற்று நட்ட பள்ளி மாணவர்கள்… பூரிப்பில் பெற்றோர்கள்..!!

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் விவசாயப் பணியில் இறங்கி நாற்று நட்டது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது

திண்டுக்கல் மாவட்டத்தில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய பணியில் மும்முரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கண்மாய்களில் நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் நாற்று நடும் பணியை தொடங்கியுள்ளனர். கொரோனா தொற்றினால் வீட்டில் இருக்கும் பிள்ளைகளும் பெற்றோருடன் விவசாய பணியில் இறங்கியுள்ளனர்.

கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் வயல்களில் இறங்கி நாற்று நட்டு விவசாயப் பணியை ஆர்வத்துடன் செய்வதை பார்த்த பெற்றோர்கள் பெரிதும் மகிழ்ச்சிக்கு   உள்ளாகியுள்ளனர். எத்தனை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டாலும் விவசாயம் மட்டுமே மக்களை காப்பாற்றும் என்ற உண்மையை தங்கள் பிள்ளைகள் உணர்ந்து விட்டதாக பெற்றோர்கள் மகிழ்ந்து அவர்களுக்கும் விவசாயம் குறித்து கற்றுக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

Categories

Tech |