Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் மகிழ்ச்சி “பழைய பஸ் பாஸ்ஸில் பயணிக்கலாம்” போக்குவரத்து துறை அறிவிப்பு…!!

நாளை பள்ளி திறக்க்கவுள்ள நிலையில் அனைத்து மாணவர்களும் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி செல்லலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் வெளியிலின் தாக்கத்தால் பள்ளிகளின் திறப்பு நாள் தள்ளி போகும். அதே போல இந்தமுறையும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி திறக்கும் தேதியை மாற்ற வாய்ப்பு இல்லை , திட்டமிட்டபடி ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதியாக  கூறி இருந்தார்.

Image result for பள்ளி மாணவர்கள் போக்குவரத்துத்துறை

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றது. இதனால் நாளை பள்ளி செல்லும்  மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம் சீருடை அணிந்து பயணிக்கும் மாணவ, மாணவிகள் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |