Categories
கல்வி

“+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்” பெயர் மாற்றம், இதர திருத்தங்கள்…. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, 2023-ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வில் பங்கேற்க இருக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் போன்றவற்றை உடனடியாக சரிபார்த்து அனுப்ப வேண்டும். இந்த வழிகாட்டுதல் களை பின்பற்றி அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர், புகைப்படம் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றில் ஏதாவது திருத்தங்கள் இருந்தால் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதலுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

இதை வருகிற 28-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதன் பிறகு இதில் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் மட்டும் தான் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால் 10-ம் வகுப்பு தேர்வுக்கு பிறகு அரசிதழில் பதிவு செய்து பெயர் மாற்றம் செய்த மாணவர்களுக்கு அரசிதழில் உள்ள விவரங்களை பயன்படுத்தி பெயரை மாற்றம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து 2021-22 ஆம் கல்வியாண்டிற்கு முன்பாக 11-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுவிட்டு, இடைநின்ற மாணவர்கள் மீண்டும் 12-ம் வகுப்பில் சேர்ந்து படித்தால் அவர்களுடைய பெயர் 2023-ம் ஆண்டு பொதுத்தேர்வில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. இதேபோன்று வேறு மாநிலத்தில் படித்துவிட்டு மற்றும் CBSE பாடத்திட்டத்தில்‌ 11-ம் வகுப்பு படித்துவிட்டு தற்போது மாறி இங்குள்ள பள்ளிகளில் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தால் அவர்களுடைய பெயரும் 2023-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |