Categories
உலக செய்திகள்

இது கொரோனாவை கட்டுப்படுத்துமா..? இந்தியாவில் அளிக்கப்படும் ஆயுர்வேத சிகிச்சை… பிரபல நாட்டில் சோதனை..!!

பிரித்தானியாவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவில் அளிக்கப்படும் அஸ்வகந்தா ஆயுர்வேத சிகிச்சை எந்த அளவு செயல்படுகிறது என்ற ஆய்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆயுர்வேத சிகிச்சைகள் அதிகம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆயுர்வேத சிகிச்சை மூலம் கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே மன அழுத்தத்தை குறைக்க, உடல் சக்தியை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க அஸ்வகந்தா என்ற மூலிகை பொருள் அடங்கிய மருந்துகள் ஆயுர்வேத சிகிச்சை முறையில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த அஸ்வகந்தா மருந்து கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பிரித்தானியா இந்த அஸ்வகந்தா குறித்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பிரித்தானியா லண்டனில் உள்ள சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவ பள்ளியுடன், மத்திய அரசின் ஆயுஸ் அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிர்மிங்ஹாம், லண்டன், லீசெஸ்டர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,000 நபர்களிடம் இந்த பரிசோதனையை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |