Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து வீடு வீடாகச் சென்று ஆய்வு – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்வதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் வீடுவீடாக சென்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கட்டுப்பாடு விலக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் புதிய தொற்று பாதிப்பு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது,

தொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும். தளர்வுகள் அதிகரிக்கும் போது நோய் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து வியூகம் வகுக்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்கவே மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை நீடிக்கிறது என அவர் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா அறிகுறி ஏற்பட்டவர்களை கண்டறிந்து சிகச்சை அளிப்பதால் உயிரிழப்பு தடுக்கப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் மக்கள் தொகை அதிகம் இருப்பதால் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது, இன்னும் 2 வாரங்களில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் விதிகளை பின்பற்றாத சலூன் கடைகளை 4 மாதங்களுக்கு திறக்க முடியாது என்றும் 4 துறை தொடர்பான விவகாரம் என்பதால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் திறப்பு பற்றி தற்போது கூற இயலாது என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

Categories

Tech |