Categories
அரசியல் மாநில செய்திகள்

படிப்பு… படிப்பு…. படிப்பு என படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்: புத்தாண்டு வாழ்த்தோடு C.M அட்வைஸ்!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். அதில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், ஓராண்டு காலத்தில ஒரு கோடி பேருக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகள்ல செஞ்சிருக்கோம். மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் மூலமாக ஒரு கோடி பேரு பயனடைந்து இருக்காங்க. 2 கோடியே 19 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட இருக்கிறது.

கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் வழியாக ஒரு நாளைக்கு 36 லட்சம் பயணங்களை மகளிர்  மேற்கொண்டு பயனடைகிறார்கள். இப்படி கோடிக்கணக்கானவர்கள் நாள்தோறும் பயன் பெற்று,  நெஞ்சார வாழ்த்து அரசாக நமது கழக அரசு செயல்பட்டு வருகிறது. வருகிற 2023ஆம் ஆண்டும், பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த இருக்கின்றோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உழவர்கள், மாணவர்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், விளிம்பு நிலையினர் என அனைவருக்கும் இன்னும் பல புதிய திட்டங்கள் வர இருக்கு.

திராவிடம் மாடல் ஆட்சியின் லட்சியம் என்பது கல்வியில், வேலை வாய்ப்பில்,  அறிவுத்திறனில்,  தொழில் வளர்ச்சியில்,  அனைவருக்கும்மான சமூக வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக ஆவதுதான். அந்த லட்சத்துக்காக என்னையே, நான் ஒப்படைத்துக் கொண்டு செயல்படுகின்றேன். இதுக்கு தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் அனைவரும் மனமார்ந்த ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

சமூகநீதி மண்ணாக, மதச்சார்பற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க, தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைக்கணும். நம்மிடையே வெறுப்புணர்வை தூண்டி, நம்மை பிளவுபடுத்தும் சாதிய – மதவாத சக்திகளுக்கு எப்பவும் நாம் இடமளிக்கக்கூடாது. மொழியால், இனத்தால், தமிழர்கள் என்று உணர்வோடு ஒன்றிணைந்து வாழ்வோம். நல்லிணக்க மாநிலமாக இருந்தால் தான் சிறந்த மாநிலமாக ஆக முடியும். இன்றைய இளைய சமுதாயமானது படிப்பு , படிப்பு ,  படிப்பு என படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |