Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆனந்த குளியல் போட்ட கோலி படை” இடம்பெற்றார் ரோகித்..!!

கேப்டன் விராட் கோலி வீரர்களுடன் பீச்சில் ஆனந்த குளியல் போடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற  டி20 மற்றும் ஒருநாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இதையடுத்து 3 நாட்கள் கொண்ட டெஸ்ட்  பயிற்சி போட்டி கடந்த 17-ஆம் தேதி தொடங்கி 19- ஆம் தேதியன்று முடிந்தது. இப்போட்டி சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி விளையாட உள்ளது.

Virat Kohli Enjoys "Stunning Day At Beach With Boys" Ahead Of West Indies Tests

இந்த முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி தான் தொடங்குகிறது. இதனால் இடையில் 4 நாட்கள்இருப்பதால்  இந்திய அணியினர் ஜாலியாக பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணியினர் வெஸ்ட் இண்டீஸ் சென்றதில் இருந்தே புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில்  பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக விராட் கோலி சமீபத்தில் கூட அடுத்தடுத்து வீரர்களுடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். மேலும் ஜிம்மில் வொர்க் அவுட் செய்வது போன்றும் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

Image result for indian cricket team

இந்நிலையில் இந்திய அணியினர்  அண்டிகுவா பகுதியில் உள்ள ஜாலி கடற்கரை பகுதியில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா, பும்ரா, கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், மயங் அகர்வால், அஜிங்கியா ரஹானே உள்ளிட்ட வீரர்கள் ஆனந்த குளியல் போட்டனர். இந்த புகைப்படத்தை கேப்டன் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் வீரர்களுடன் “கடற்கரையில்அதிர்ச்சியூட்டும் நாள்” என்றும் பதிவிட்டுள்ளார்.  

https://www.instagram.com/p/B1aUS5IFO0P/?utm_source=ig_web_copy_link

Categories

Tech |