‘தளபதி 66” குறித்து அசத்தல் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13 ம் தேதி வெளியான திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இதனையடுத்து, இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
மேலும், தில் ராஜ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு 30% முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவந்து வெற்றியை கொடுக்க வேண்டும் என விஜய் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.