குழந்தை சுஜித்தை மீட்க ஸ்டன்ட் கலைஞர்கள் தாமாக முன் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.
இதையடுத்து பல்வேறு இடங்களிலிருந்து வந்த மீட்பு குழுவினர் குழந்தையை மீட்க 15 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திரைத் துறையில் பணிபுரியும் ஸ்டன்ட் கலைஞர்கள் பல்வேறு நவீன கருவிகளை கொண்டு வந்து அதன் மூலம் குழந்தையை மீட்பதற்கான பணியில் தாமாக முன்வந்து ஈடுபட்டு உள்ளனர்.