பட்டாசு கடைகளில் சப் கலெக்டர் நேரில் ஆய்வு செய்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி பஜார் வீதி, சீதாராமய்யர் தெரு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பழக்கடைகளில் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் தீபாவளி காலகட்டத்தில் பட்டாசு விற்பனை செய்வதற்காக உரிமம் வழங்க கடை உரிமையாளர்களின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட சப்-கலெக்டரான மந்தாகினி வந்தவாசி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு கடைகளில் திடீரென ஆய்வை மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வில் பட்டாசு கடைகளில் தீயணைப்பான், உள்ளே வெளியே செல்வதற்காக தனித்தனியே வழிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவைகள் இருக்கின்றதா? என ஆய்வு செய்துள்ளார். மேலும் இந்த ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் கலைவாணி, தாசில்தார் முருகானந்தம், VAO யாசர் ஆகியோர் உடன் இருந்தனர்.