Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடந்து சென்றவர் மீது மோதிய சரக்கு வாகனம்…. விபத்தில் சிக்கிய சப் -இன்ஸ்பெக்டர்…. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்….!!

 சரக்கு வாகனம் மோதியதில் சப் இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் சாத்தூர் பகுதியில் உள்ள பங்களா தெருவில் வசிப்பவர் முருகன். இவர் மாவட்ட குற்றவியல் காவல் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு மாலையில் சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள பழைய அரசு மருத்துவமனைக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த சரக்கு வாகனம் இவர் மேல் மோதியதில் அவர் அங்கேயே கீழே விழுந்தார்.

இதில் முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக பலியானார். இதனைத்தொடர்ந்து காவல்துறை சார்பில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Categories

Tech |