கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் சிவாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிவாஜி தளி-ஓசூர் சாலையில் இருக்கும் தொட்ட குப்பனூர் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவாஜியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.