Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கு நீ புத்தி சொல்கிறாயா….? சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்த மகள்…. பின் நடந்த சம்பவம்…!!

மது அருந்துவதை கண்டித்ததால் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சாய் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீராபுரம் பகுதியில் இருக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3-வது பாட்டாளியனில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வரும் சாய்குமாரை அவரது மூத்த மகளான சொரூபா கண்டித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் எனக்கு நீ அறிவுரை கூறுகிறாயா என்று மகளிடம் சண்டை போட்டுள்ளார். அதன் பின் கத்தியை எடுத்து தனது வயிற்றில் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருமுல்லைவாயல் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |