முதல் மனைவிக்குத் தெரியாமல் நடிகை ராதாவை சப்-இன்ஸ்பெக்டர் இரண்டாவதாக திருமணம் செய்ததால் கமிஷனர் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ்.புரம் போலீஸ் குடியிருப்பில் வசந்த ராஜ் என்ற சப்-இன்ஸ்பெக்டர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுந்தரா டிராவல்ஸ் போன்ற பல்வேறு படங்களில் நடித்த பிரபல நடிகை ராதாவை வசந்தராஜா இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் விருகம்பாக்கத்தில் இருக்கும் ராதா வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இதனை அடுத்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை ராதா தனது இரண்டாவது கணவர் அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்தார்.
அதன் பின் இருவரும் சமரசமாக பேசி கொண்ட பிறகு அந்த புகாரை வாபஸ் வாங்கி விட்டார். இதனை தொடர்ந்து விருகம்பாக்கம் காவல் துறையினர் நடிகை ராதா அளித்த புகாரின்படி விசாரணை நடத்தியபோது வசந்த ராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகிய நிலையில் முதல் மனைவிக்குத் தெரியாமல் நடிகை ராதாவை இரண்டாவதாக ரகசிய திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதனால் தெற்கு மண்டல இணை கமிஷனர் லட்சுமி வசந்தராஜா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.