Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்” உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை ஐகிரௌண்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பழனி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது அங்கு வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் பழனியை உடனடியாக மீட்டு சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பழனியை பரிசோதனை செய்த பிறகு அவர் விஷம் குடித்தது தெரியவந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பழனி பலனில்லாமல் பரிதாமபமாக உயிரிழந்தார்.

மேலும் இதுகுறித்து நடத்திய விசாரணையில் பழனியின் மனைவி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ஒரே மகன் என்ஜினியரிங் படித்து வருகிறார். இந்நிலையில் பழனி மனைவி இறந்ததும் சோகத்துடன் வாழ்க்கையில் விரக்தி அடைந்ததாக காணப்பட்டுள்ளார்.மேலும் பழனி யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இதனால் அவர் தற்கொலைக்கு முயன்றாரா? என விசாரணை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் உயர் அதிகாரிகள் மாநகரப் பகுதி முழுவதும் நான்கு சக்கர வாகனங்களின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த பம்பர்களை அகற்றும்படி உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் அதில் ஈடுபட்டிருந்த பழனியிடம் அதிக அளவு வாகனங்களுக்கு அபராதம் விதிகுமாறு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பழனியின் மகன் சுதாகரன் என்பவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உறவினர்களுடன் வந்துள்ளார். அங்கு சுதாகரன் கமிஷனர் செந்தாமரைக் கண்ணனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறிஇருப்பதாவது, என்னுடைய தந்தை போலீஸ் துறையில் நேர்மையாகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

அவர் 3 மாதங்களுக்கு முன்பாக ஐகிரௌண்டு காவல் நிலைய அதிகாரியின் துன்புறுத்தலால் விருப்ப ஓய்வு தருவதற்காக மனு கொடுத்திருந்தார். இதனால் கோபமடைந்த அதிகாரி ஒருவர் என்னுடைய தந்தையை அவமானப்படுத்தியுள்ளார். மேலும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அதிகமாக அபராதம் விதிக்குமாறு உத்தரவிட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் எனது தந்தை தற்கொலை செய்து கொண்டார். எனவே எனது தந்தையை தற்கொலைக்கு தூண்டிய அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார். இதற்கிடையில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பழனியின் உடலை வாங்க மறுத்து விட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |