Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தியடைந்த சப்-இன்ஸ்பெக்டர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை ஐகிரௌண்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பழனி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது அங்கு வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் பழனியை உடனடியாக மீட்டு சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஓலணியை பரிசோதனை செய்த பிறகு அவர் விஷம் குடித்தது தெரியவந்தது. மேலும் பழனியின் மனைவி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ஒரே மகன் என்ஜினியரிங் படித்து வருகிறார். இந்நிலையில் பழனி மனைவி இறந்ததும் சோகத்துடன் வாழ்க்கையில் விரக்தி அடைந்ததாக காணப்பட்டுள்ளார்.

மேலும் பழனி யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இதனால் அவர் தற்கொலைக்கு முயன்றாரா? என விசாரணை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் உயர் அதிகாரிகள் மாநகரப் பகுதி முழுவதும் நான்கு சக்கர வாகனங்களின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த பம்பர்களை அகற்றும்படி உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் அதில் ஈடுபட்டிருந்த பழனியிடம் அதிக அளவு வாகனங்களுக்கு அபராதம் விதிகுமாறு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |