ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப் படாமல் காவல்துறை காப்பாற்றுவது யாருக்காக? என்று முக ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இதற்கு முக்கிய காரணமான தன் இல்ல திருமணத்திற்கு பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில், சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம்! காவல் நிலைய பாத்ரூமில் பலரும் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போடும் நிலையில், ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப் படாமல் சென்னை போலீஸ் காப்பாற்றுவது யாருக்காக? என்று தெரிவித்துள்ளார்.
சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம்!
காவல் நிலைய பாத்ரூமில் பலரும் வழுக்கி விழுந்து மாவுக்கட்டு போடும் நிலையில், ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப் படாமல் @chennaipolice_ காப்பாற்றுவது யாருக்காக? pic.twitter.com/PjDWPl1Xf0
— M.K.Stalin (@mkstalin) September 21, 2019