சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதனை நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட்டம் தேன்கனிக்கோட்டையில் சொகுசு விடுதியில் பதுங்கியிருந்த ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக கொடிகட்டுதல் , பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்ட பழனி , சுப்பிரமணியன் , சங்கர் , லட்சுமிகாந்த் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் தலைமறைவாக இருந்த ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதனை நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர்.