பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த கடந்த 12ம் தேதி குரோம்பேட்டை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மீது பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அனுமதியின்றி பேனர் வைக்க கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டு இருக்கிறது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை பேனர் வைத்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபாலை காவல்துறையினர் கைது செய்யவில்லை. இவர் மீது இரண்டு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி வைத்ததாகவும் , விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினரும் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்நிலையில் ஜெயகோபாலை இதுவரை கைது செய்யவில்லை என்று உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தடையை மீறி பெயர் வைத்தது தொடர்பாக உடனடியாக அகற்றாத பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் அழகு மீது துறை ரீதியான நடவடிக்கை இணை ஆணையர் மகேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.