சீன அதிபர் மற்றும் மோடி தமிழக வருகையையொட்டி அதிமுக மற்றும் அரசு சார்பில் பேனர் வைக்காதது அதிமுக அரசு மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
இதை தொடர்ந்து பேனர் கலாசாரத்திற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இன்னும் எத்தனை லிட்டர் இரத்தம் குடிக்க காத்திருக்கின்றது தமிழக அரசு என்று கடுமையாக கண்டித்தது. மேலும் பல அரசியல் கட்சிகள் , ரசிகர் மன்றங்கள் இனிமேல் பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதியளித்தனர்.
இந்நிலையில் இன்று தமிழகம் வந்துள்ள மோடி மற்றும் சீனா அதிபர் இருநாள் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறுகின்றது. இதற்காக இரு தலைவரைகளையும் வரவேற்க்கே பேனர் வைக்க வேண்டுமென்று நீதிமன்றத்தில் அனுமதி வாங்கிய நிலையில் இன்று அதிமுகவோ அல்ல தமிழக அரசு சார்பிலோ இரு தலைவர்களை வரவேற்று பேனர் வைக்கப்படவில்லை.
இது அதிமுக அரசின் மீது மக்களுக்கு நல்ல நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதாவது இரு தலைவர்கள் வருகையையொட்டி நீதிமன்றத்தில் அனுமதி பெற்றும் பேனர் வைக்காதது அதிமுக அரசின் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சுபஸ்ரீ மரணத்தால் அதிமுக அரசுக்கு பொறுப்பு வந்துள்ளது அப்படியே தொடர்ந்தால் நன்றாகவே இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.