திமுகவில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை வெளியீட்டு, அறிவித்திருக்கிறார்.
முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இருந்து வருகிறார். நீண்ட காலமாக . திமுகவினுடைய துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொட்டகுறிச்சி தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். அந்த தோல்விக்கு காரணம் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் உள்ளடி வேலை செய்தவர்களாக அதிருப்தியில் இருந்ததோடு, இது குறித்து தலைமையிடம் புகார் கொடுத்திருந்தார்.
ஆனாலும் உள்ளடிவேலையில் ஈடுபட்டவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலினுடைய தோல்விக்கு பிறகு தனக்கு ராஜசபா எம்பி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு அந்த பதவியானது வழங்கப்படவில்லை. சில நாட்களுக்கு முன்னால் நடந்த முப்பெரும் விழாவிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அப்போதே அவர் கலந்து கொள்ளாதது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.
அதன் பிறகு அவருடைய கணவரும் முகநூல் பக்கத்தில் பல்வேறு விமர்சனங்களை கட்சியின் மீது வைத்து வந்தார். குறிப்பாக மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அவர் கட்சிக்கு எதிரான வாசகங்களை அவர் முகநூலில் பதிவிட்டு வந்தார். இது குறித்தும் சுப்புலட்சுமி ஜெகதீஷன் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்து வந்தது, கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில்தான் அவர் சில நாட்களுக்கு முன்னதாகவே ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் வழங்கிவிட்டதாக தற்போது அவரே அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், 2009 நாடாளுமன்ற உறுப்பினருக்கான பதவிக்கால முடிந்த எழுப்பினரே நான் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து வெளியேறுவதாக முன்னாள் முதலமைச்சர் கலைஞரிடமே தெரிவித்துவிட்டேன் எனவும்,
கலைஞருடைய மறைவிற்கு பிறகு முக ஸ்டாலின் விருப்பத்தின் பேரில் கழகத்தின் வெற்றிக்காகவும், கழகத்தின் வளர்ச்சிக்காகவும், கழக பணியை மட்டும் செய்து வந்ததாகவும், 2021 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று முதலமைச்சரான மு க ஸ்டாலின் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறார் எனவும் அவர் அறிக்கையில் பாராட்டியுள்ளார்.
மேலும் மன நிறைவோடு அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதி அன்று முதலமைச்சரை நேரில் சென்று கட்சியில் இருந்து விலகுவதாக கடிதத்தை அனுப்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். கடந்த சில நாட்களாகவே சுப்புலெட்சுமி ஜெகதீஷன் கட்சியில் இருந்து விலகியுள்ளார் என பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது சுப்பு லட்சுமி ஜெகதீஷனே அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.