Categories
தேசிய செய்திகள்

இராமர் சேது பாலம்: 3 மாதங்களுக்குப் பின் பரிசீலிக்கிறோம்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ..!

இராம சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்  பாஜக மூத்த தலைவரும்  சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை 3 மாதங்களுக்குப் பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என  உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.

இராமர் பாலம்  அல்லது ஆதாமின் பாலம் (Adam’s Bridge) என்று அழைக்கப்படும். இது  தமிழ்நாட்டில்  உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே சுண்ணாம்பு கற்களால் உருவான ஆழமற்ற மேடுகளாகும். 30 கி.மீ நீளம் கொண்ட இந்தப் பாலம், இந்த பாலத்தில், கடல் ஆழம் சுமார் 3 முதல் 30 அடி வரையே உள்ளது. சில மேடுகள் கடல் மட்டத்திற்கு மேலும் உள்ளன. இது இராம சேது  என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தார். அதில், ”இராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசின் தொல்லியல் துறை அமைப்பு மூலம் அறிவிக்க உத்தரவிட வேண்டும்.

மேலும்,  மத்திய அரசு அந்த இடத்தில் ராமர் சேது பாலம் உள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது எது குறித்து ஏற்கெனவே நான் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. ஆனால் 2017ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தின் போது ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என நான் விடுத்த கோரிக்கைக்கு இதுவரை ஏதும் நடக்கவில்லை

எனவே இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்’’ எனக் கோரித் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் எஸ்.ஏ.நசீர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள், “உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்த மனுவை நீங்கள் 3 மாதங்களுக்குப் பின்பு  தாக்கல் செய்யுங்கள். அப்போது நாங்கள்  இதைப் பரிசீலிக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

Categories

Tech |