Categories
மாநில செய்திகள்

“விவசாயிகளுக்கு மானியம்”… எந்தெந்த பயிர்களுக்கு எவ்வளவு தொகை….? தமிழக அரசு சொன்ன தகவல் இதோ….!!!!!

தமிழகத்தில் பழங்கள், மலர்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றின் சாகுபடியை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசானது மானியம் வழங்கி வருகிறது. இதுக்கு தொடர்பான பல்வேறு திட்டங்களை கடந்த 2 வருடங்களாக வெற்றி கரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் பிறகு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சுவை தாளித பயிர் ஊக்குவிப்போம், மலர் சாகுபடி மூலம் தினசரி வருமானம், உயர்தொழுநுட்ப முறையில் தோட்டக்கலை சாகுபடி போன்றவற்றில் சாகுபடி பரப்பினை அதிகரிப்பதற்கு 202-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து தோட்டக்கலை துறை சார்ந்த சாகுபடிகளை அதிகரிப்பதற்காக 170.79 கோடி மதிப்பீட்டில் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு அனுமதி பெற்றுள்ள நிலையில், முதற்கட்ட துவக்கமாக 25,680 எக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்வதற்காக ரூபாய் 50 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காய்கறிகள், பழங்கள், மிளகாய் போன்ற காய்கறி சாகுபடி பயிர்களுக்கு 2 எக்டர் நிலப்பரப்பிற்கு 20 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். அதன் பிறகு மா மற்றும் கொய்யா சாகுபடிக்கு எக்டருக்கு 9800 மானியத்தில், கொய்யா மற்றும் மா செடிகளுக்கு மொத்தமாக சேர்த்து 16,000 ரூபாய் மானியமும், இடு பொருட்களும் வழங்கப்படும்.

இதேபோன்று வாழை சாகுபடிக்கு எக்டருக்கு 37 ஆயிரத்து 500 மானியமும் இடுபொருட்களும், பப்பாளி சாகுபடிக்கு எக்டருக்கு பப்பாளி கன்றுகளோடு சேர்த்து 23,000 மானியமும், எலுமிச்சை சாகுபடிக்கு கன்றுகளோடு சேர்த்து 13 ஆயிரத்து 200 ரூபாய் மானியமும், அத்தி சாகுபடிக்கு எக்டருக்கு அத்தி நாற்றுகளோடு சேர்த்து 20 ஆயிரத்து 300 ரூபாய் மானியமும், பலா, நெல்லி, வெண்ணெய் பழம் போன்றவற்றின் சாகுபடிக்கு நடவு செடிகள் மற்றும் இடுபொருட்களோடு சேர்த்து எக்டருக்கு 14,400 மானியமும், டிராகன் பழ சாகுபடிக்கு எக்டருக்கு 96 ஆயிரம் ரூபாய் மானியமும், அண்ணாச்சி பழ சாகுபடிக்கு எக்டருக்கு 26 ஆயிரத்து 300 ரூபாய் மானியமும், ஸ்ட்ராபெர்ரி சாகுபடிக்கு எக்டருக்கு 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மானியமும், கோக்கோ, முந்திரி, சாகுபடிக்கு எக்டருக்கு 12 ஆயிரம் மானியத்தில் நடவுப் பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படும்.

இதைத்தொடர்ந்து உதிரி மலர்கள் சாகுபடிக்கு 16 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மலர் செடிகள் மற்றும் கிழங்கு வகைகள் வழங்கப்படுவதோடு கள ஆய்வுக்கு பிறகு 60 ஆயிரம் ரூபாய் மானியமும், கொய்மலர்கள் சாகுபடிக்கு எக்டருக்கு 40 ஆயிரம் ரூபாய் மானியமும், பல்லாண்டு சுவை தாளி பயிர்களுக்கு எக்டருக்கு 20,000 மதிப்பிலான நடவுப் பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் மானியமாகவும், கிழங்கு வகை சுவை தாளி பயிர்களுக்கு நடவுக்குப்பின் கள ஆய்வு செய்யப்பட்டு எக்டருக்கு 12 ஆயிரம் ரூபாய் மானியமும், சுவைதாளிப் பயிர்களுக்கு‌ எக்டருக்கு 12 ஆயிரம் மதிப்பில் குளித்தட்டு நாற்றுகள் மற்றும் இடுபொருட்கள் மானியமாகவும் வழங்கப்படும்.

இந்த மானியங்களை சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் மற்றும் ஒரு நிலத்தை 10 வருடத்திற்கு குத்தைகைக்கு எடுத்தவர்கள் பெற்றுக் கொள்ளலாம். மானியம் பெறுவதற்கு பட்டா, சிட்டா, அடங்கள், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு எண், புகைப்படம் போன்றவைகள் இருக்க வேண்டும். மேலும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் https://www.tnhorticulture.tn.gov.in.tnhortnet/login.php என்ற இணையதளத்தில் தங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்வதோடு கூடுதல் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் ‌

Categories

Tech |