‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் சசிகுமார், மிருணாளினி ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து இயக்கியுள்ள படம் ‘எம்ஜிஆர் மகன்’. இதில் சமுத்திரகனி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் பாடகர் அந்தோனிதாசன் இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதுகுறித்து சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து, வெகு விரைவில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Successfully wrapped up the shooting of #MGRMAGAN today in Theni.Thanking my team for their effort n hardwork @ponramVVS @thondankani @Screensceneoffl @mirnaliniravi #sathyaraj sir pic.twitter.com/prINzLCQgB
— M.Sasikumar (@SasikumarDir) November 20, 2019