செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் மாவட்ட மாநகர தலைவர் பாலாஜி உத்தமராஜாக இருக்கலாம், இதற்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், அதற்கு முன்பு கோவில்பட்டி, வெள்ளூர் போன்ற அனைத்து இடங்களிலும் கூட பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். காரணம் அவங்க போய் போஸ்டர் ஒட்டுனாங்க, இதை கண்டித்து. அது ஒரு காரணம்.
காவல்துறையினரே தங்களிடம் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் சண்டை போட்டதாக அவர்களே ஒரு வழக்கை புனைந்து, அதிலே பிணையில் வரமுடியாத சட்டப்பிரிவை கொண்டுவந்து பாஜகவினரை கைது செய்து இருக்கின்றார்கள். ஊட்டியில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள், ஊட்டி மாவட்டத்தின் பொதுச்செயலாளர் உட்பட எட்டு பேர் சிறையில் இருக்கின்றார்கள். கோயம்புத்தூர் மாநகர மாவட்ட தலைவர் காலையிலே கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.
கள்ளக்குறிச்சியில் இரண்டு பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள், கோவில்பட்டியில் 6 தொண்டர்கள், வேலூரில் 103 தொண்டர்கள் தமிழகத்தில் எல்லா இடத்திலும் பாஜக தொண்டர்கள் இந்த விஷயத்திற்காக, எதிர்த்து குரல் கொடுத்ததற்காக போலியாக வழக்குகள் புனையப்பட்டு… முதல் முதலாக 353 IPC பிரிவு போட்டு, காவல்துறை பணியை செய்ய வந்தபோது காவல்துறையை தடுத்ததாக ஒரு வழக்கை கொண்டு வந்து, அதை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவாக காட்டி சிறையில் அடைந்துள்ளனர்.
இவர்கள் பேசிய கருத்துக்கள் மூலம் சமுதாயத்திற்கிடையே பிரச்சனை உருவாக்குதல் 153 IPC என்கின்ற பிரிவை போட்டுள்ளனர். அதாவது ராசா அவர்கள் பேசிய கருத்துகளால் சமுதாயத்துக்குள் பிளவு ஏற்படாதாம், அதை கண்டித்து கேட்ட பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டர்களுடைய கருத்துக்கள், தலைவர்களுடைய கருத்துக்களால் சமுதாயத்தில் பிளவு ஏற்படுவது என்று சொல்லி போட்டு இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.