Categories
சினிமா தமிழ் சினிமா

ரிலீஸ் தேதியை அறிவித்த “வாரிசு”…. அதிரடியாக தொடங்கிய மோதல்…. குட் நியூஸ் சொல்வாரா “தல அஜித்”….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், சாம், சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாரிசு படத்தின் ஒரு போஸ்டர் வெளியானது. அதில் ஹேப்பி தீபாவளி நண்பா அடுத்த வாரத்தில் இருந்து சும்மா பட்டாசு வெடிக்கும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்பிறகு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதையும் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கும் துணிவு திரைப்படமும் கிட்டத்தட்ட பொங்களுக்கு ரிலீஸ் ஆகும் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் வாரிசு படத்துடன் துணிவும் மோதுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், கூடிய விரைவில் அஜித் நல்ல செய்தி கூறுவார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |