Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் “வெற்றி தடம்” 2 ஆண்டில் 3,000 ஷோ ரூம்…. பிரபல சீன நிறுவனம் பிரம்மாண்ட வெற்றி….!!

2 ஆண்டுகளில் இந்தியாவில் அபரிவிதமான வளர்ச்சியை பிரபல சீன நிறுவனம் கண்டுள்ளது.

மொபைல் போன் என எடுத்துக்கொண்டாலே பலரும் விரும்பக்கூடிய மொபைல்கள் ஆக ரெட்மி, ஓப்போ, விவோ, ஒன் பிளஸ் உள்ளிட்ட ஏராளமான சீன நிறுவனங்கள் ஆகவே இருக்கின்றனர். அதற்கு காரணம் குறைந்த விலையில் அதிகமான தொழில்நுட்பங்களை, நல்ல கேமரா கொண்ட மொபைல்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனங்கள் வழங்குவதே.

சமீபத்தில் சீன பொருட்களை வாங்க வேண்டாம் என பல கட்டப் போராட்டங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வந்தபோதிலும், மொபைல்போன் விவகாரத்தைப் பொறுத்தவரையில் அது நடக்காத ஒன்றாகிவிட்டது. சீனாவுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களே சீன மொபைலை தான் பயன்படுத்துகிறார்கள். மீண்டும் அதைத்தான் வாங்க ஆசைப்படுகிறார்கள். இவ்வளவு ஏன்? சமீபத்தில்கூட ஒன் பிளஸ் தரப்பிலிருந்து பட்ஜெட் விலையில்

வெளியான ஒன் பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் லட்சக்கணக்கானோர் வாங்கி உள்ளதாகவும், மேலும் பலர் வாங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒருபுறமிருக்க, சீன நிறுவனமான சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது 3000-வது ஷோரூமை திறந்துள்ளது. இந்த ஷோரூம்கள் மூலம், இந்தியா முழுவதும் 6,000 க்கும் அதிகமான நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15, 2018 ஆம் ஆண்டு பெங்களூருவில் முதல் சியோமி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |