36 வயதுடைய இளைஞர் 81 வயதுடைய மூதாட்டியை காதலித்து வருவது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த 81 வயதுடைய ஐரிஸ் ஜோன்ஸ் என்பவருக்கும் எகிப்து நாட்டை சேர்ந்த 36 வயதுடைய மஹமத் என்ற இளைஞருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்களது பழக்கம் காதலாக மலர்ந்தது. கடந்த நவம்பர் மாதம் காதலனை பார்க்க ஐரிஸ் பிரிட்டனிலிருந்து எகிப்திற்கு சென்றுள்ளார்.
அவரை வரவேற்க காதலன் மஹமத் ஏர்போர்டில் காத்துக் கொண்டிருந்தார். அதன்பின் ஐரிஸை கண்ட மஹமத் அவரை தன் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார். அதன் பின் அவர்களது காதலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். மஹமத் இப்படி ஒரு அழகான தேவதை எனக்கு காதலியாக வந்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,ஐரிஸின் 54 வயது நிரம்பிய மகன் ஸ்டீபன் இவர்களது காதலை கடுமையாக எதிர்த்து வந்தார். ஆனால் ஐரிஸ் தனது காதலில் உறுதியாக இருந்ததால் ஸ்டீபன் தாயிடமிருந்து பிரிந்து சென்று குடும்பமே இரண்டாக உடைந்தது. கொரோனா காலகட்டம் என்பதால் பிரிட்டனில் இருக்கும் காதலியை பார்க்க செல்வதற்கு மஹமத்திற்கு விசா கிடைக்கவில்லை. ஆகையால் காதலியைப் பார்க்கவேண்டும் என்ற ஏக்கத்துடன் மஹமத் காத்துக்கொண்டிருக்கிறார்.