Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதிக்கு இவ்வளவு பெரிய மகனா? அவரே வெளியிட்ட புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

உதயநிதி ஸ்டாலின் தன் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் திமுக கட்சியின் இளைஞரணிச் செயலாளராகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது கண்ணை நம்பாதே, ஏஞ்சல் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார்.

உதயநிதிக்கு கிருத்திகா எனும் மனைவி இருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தமிழ் சினிமாவில் வெளியான வணக்கம் சென்னை, காளி ஆகிய படங்களை இயக்கியவர் தான் கிருத்திகா. உதயநிதி மற்றும் கிருத்திகா தம்பதியினருக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் உதயநிதி தனது மகனின் மகனின் தோலில் நண்பர்களைப் போல் கை போட்டு புகைப்படம் எடுத்துள்ளார். இப் புகைப்படத்தை அவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்க்கும் ரசிகர்கள் பலரும் உதயநிதிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/p/CN7qTWDl79y/?igshid=1f6tex6748kch

Categories

Tech |