Categories
தேசிய செய்திகள்

இப்படியும் ஒரு மாமியாரா…? குடுத்து வச்சவன்டா நீ…! 1 இல்ல 2 இல்ல மொத்தம் 125…. திகைத்துபோன மருமகன்….!!!

தன்னுடைய மகளை திருமணம் செய்யும் மாப்பிளைக்கு மாமியார் தடபுடலான விருந்து வைத்து அசத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயநகர் மாவட்டம் எஸ். கோட்டா பகுதியில் சைதன்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த நிஹாரி என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது. இவர்களுடைய திருமணம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தசரா பண்டிகையின் போது மாமியார் வீட்டுக்கு விருந்துக்காக சைதன்யா  சென்றுள்ளார்.

அப்போது நிஹாரியின் தாயாரான தனலட்சுமி மருமகன் சைதன்யாவுக்கு தடபுடலான விருந்து வைத்துள்ளார். அதாவது தன்னுடைய மருமகனுக்கு 125 வகையிலான உணவு மற்றும் பலகாரங்களை பரிமாறியுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் இப்படி ஒரு மாமியார் கிடைக்க குடுத்து வச்சிருக்கணும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |