பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் வருண் தவான். இவர் தற்போது பெடியா என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ள நிலையில், ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்த படம் ஓநாய் என்ற பெயரில் தமிழிலும் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு அமெரிக்காவில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருண் தவான் சானியா மிர்சா குறித்த ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, நான் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக ஒரு விளம்பர நிகழ்ச்சியில் நடித்தேன்.
அதற்காக எனக்கு 5000 ரூபாய் சம்பளம் கிடைத்தது. அந்த சமயத்தில் நானும் சானியாவும் நண்பர்களாக பழகி வந்தோம். அப்போது சானியா எனக்கு போன் செய்து ஆப்பிள் வாங்கி வருமாறு கூறினார். உடனே நானும் ஆப்பிள் வாங்கிவிட்டு சானியாவின் வீட்டிற்கு சென்று கதவை தட்டினேன். அப்போது கதவை திறந்த சானியாவின் அம்மா என் மகளுக்கு ஆப்பிள் பிடிக்காது யாருக்காக வாங்கி வந்தாய் என்று மிகவும் கோபத்தோடு என்னை திட்டினார்.
உடனே சானியா அங்கு வந்து நான் தான் வாங்கி வர சொன்னேன் என்று கூறினார். அதன் பிறகு தான் சானியாவின் அம்மா ஓரளவு சமாதானமானார் என்று கூறினார். இந்நிலையில் நடிகர் வருண் தவான் சானியா குறித்து கூறிய சுவாரசிய தகவல் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.