காஞ்சிபுரம் அருகே கடன் தொல்லைக்கு அச்சப்பட்டு வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சென்ற மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ரூபாய் 3 லட்சம் கடனை தெரிந்த ஒரு நபரிடம் பெற்று அதில், வேன் ஒன்றை வாங்கி ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்த அவரால், மாதத் தவணையை ஒழுங்காக செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த சதீஷ்குமாருக்கு தமிழரசி என்ற மனைவியும், 9 மாத குழந்தை உட்பட இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடன் தொல்லைக்கு பயந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை தனியாக தவிக்க விட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.