முதியவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி சேர்ந்தவர் சாமிகண்ணு. இவரது குடும்பத்தார் வெளியில் சென்ற பொழுது வீட்டில் தனியாக இருந்த இவர் பூச்சி மருந்து குடித்து மயங்கி உள்ளர். வீட்டிற்குத் திரும்பிய குடும்பத்தினர் மயங்கிய சாமிகண்ணை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார் சாமிக்கண்ணு. இதனையடுத்து கோபிநாதம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்து முதியவர் பூச்சி மருந்து குடித்ததற்கான காரணத்தை அறிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.