காதல் தோல்வியின் காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பெட்ரோல் ஊழியராக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் நான்கு மாதங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பணிக்கு வராத மணிகண்டனை தேடியுள்ளனர் சக பணியாளர்கள். அப்போது பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் தொழிலாளர்களுக்கான சமையலறையில் இருந்த கம்பி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார் மணிகண்டன்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து வெள்ளவேடு காவல்துறையை துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில் மணிகண்டன் காதல் தோல்வியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.