கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத காரணத்தினால் பெண் தீக்குளித்து தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தனியார் வங்கி ஒன்றில் லோன் வாங்கி உள்ளார். ஆனால் வசந்தியால் மாத தவணையை சரியான தேதிக்குள் கட்ட முடியாத சூழலில் இருந்து வந்துள்ளார். வங்கியிலிருந்து லோன் தொகையை திருப்பி செலுத்துமாறு கூறியுள்ளனர்.
இதனால் மன விரக்தி அடைந்த வசந்தி 25ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த வசந்தியை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி வசந்தி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.